close
Choose your channels

கமல்ஹாசன் மகள் மதம் மாறிவிட்டாரா?

Friday, July 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு பகுத்தறிவாதி என்பது அனைவரும் அறிந்ததே. கடவுள் நம்பிக்கை மட்டுமின்றி ஜாதி, மதம் ஆகியவைகளுக்கும் அவர் எதிரானவர். ஜாதி பெயரை தன்னுடைய இரண்டு மகள்களின் பள்ளிச் சான்றிதழில் கூட அவர் பதிவு செய்ய மறுத்தவர்
இந்த நிலையில் கமல் பகுத்தறிவாதியாக இருந்தாலும் அவருடைய இரண்டு மகள் ஸ்ருதிஹாசன் கடவுள் பக்தி உள்ளவராக இருந்து வருகிறார் என்பது பல சந்தர்ப்பங்களில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சற்று முன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தனது மகள் அக்சராஹாசனிடம், ' ஹாய் அக்ஷூ, நீ மதம் மாறிவிட்டாயா? மதங்களை விட அன்பு எந்தவித நிபந்தனையும் அற்றது. வாழ்க்கையை அனுபவி' என்று பதிவு செய்துள்ளார்.
அதற்கு பதிலளித்த அக்சராஹாசன், 'இல்லை அப்பா, இப்பொழுது வரை நான் நாத்திகர்தான், இருப்பினும் புத்த மதத்தை நான் வாழ்க்கையின் வழிகாட்டியாக உணர்கிறேன். மேலும் அது தனிநபர் வாழ்க்கை வழிகாட்டியாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.