close
Choose your channels

அமீர்-வெற்றிமாறன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் அமீர் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைய உள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் கதையில் அமீர் திரைக்கதை வசனம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’இறைவன் மிகப் பெரியவன்’ என்று வைக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். சூரி, ஆர்யாவின் சகோதரர் சத்யா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos