close
Choose your channels

இந்த திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலாக இருக்கிறேன்.. அன்புமணி ராமதாஸ்..!

Tuesday, August 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலாக இருக்கிறேன் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த படம் தான் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவான ’கருமேகங்கள் கலைகின்றன’ என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கர்பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன் நடிப்பில் உருவான ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் சற்று முன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

இயக்குனர் தங்கர் பச்சானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன்.

இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் மேனன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் உன்னத படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

செப்டம்பர் 1-ஆம் நாள் வெளியாகவிருக்கும் அத்திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.