close
Choose your channels

எமனே வந்து மரணத்தை கேட்கும்போது நான் என்ன செய்ய முடியும்: ஆண்ட்ரியாவின் 'கா' டிரைலர்

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கா’ என்ற திரைப்படத்தின் டிரைலர் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .

‘கா’ என்றால் காடு என்று அர்த்தம் உள்ள இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா வைல்ட்லைஃப் போட்டோகிராபராக நடித்துள்ளார். அடர்ந்த காட்டில் அவர் போட்டோக்கள் எடுக்கும் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது இரண்டு நிமிட டிரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சலீம் கெளஸ் வில்லனாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’வேட்டைக்காரன்’ விஜயகாந்த் நடித்த ’சின்ன கவுண்டர்’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘எமன் வந்து என்கிட்டே எமலோகத்திற்கு மரணம் வேண்டும் என்று கேட்கும்போது நான் என்ன செய்ய முடியும் என்ற வசனத்தில் இருந்தே இவரது கொடூரமான கேரக்டர் தெரிய வருகிறது.

நாஞ்சில் இயக்கத்தில், சூப்பர் சி பாபு இசையில், அறிவழகன் ஒளிப்பதிவில் எலிசா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம், விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.