முடிவுக்கு வந்தது அஞ்சலியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 13 2018]

அஞ்சலி நடித்த் 'பலூன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'வணக்கம் சென்னை' படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் படம் 'காளி'. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் அஞ்சலி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவலை அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். கிருத்திகா உதயநிதி, விஜய் ஆண்டனி ஆகியோர்களுடன் பணிபுரிந்தது சிறப்பானதாக இருந்ததாகவும், இந்த டீமை தான் மிஸ் செய்வதாகவும் அஞ்சலி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து வருகிறார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வைரமுத்து கருத்தை வைத்து மதக்கலவரமா? மன்சூர் அலிகான் ஆவேசம்

சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பாரதிராஜா உள்பட ஒருசிலரும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தல அஜித்தின் தெறிக்கும் டீசர் ரிலீஸ் தேதி தெரிய வேண்டுமா?

தல அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே

இளைஞர் கூட்டத்தில் இணைந்ததால் நானும் இளைஞன் ஆகிறேன்: செந்தில்

இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இன்றைய முன்னணி நடிகர்களோடு முந்தைய ஜெனரேஷன் நடிகர்களான கார்த்திக், சுரேஷ்மேனன், செந்தில் ஆகிய நடிகர்களும் நடித்துள்ளதால்

சிம்பு சிம்புன்னு என்மனசு மனசு சொல்லுது: காதல் குறித்து ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. பத்து படங்களில் நடித்து கிடைக்கும் புகழை ஒரே ஒரு நிகழ்ச்சியில் பெற்றதோடு சமூக வலைத்தளங்களில் தினமும் டிரெண்ட் ஆனார்.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் 'சசிகலா' வசனத்தை இணைத்த விக்னேஷ்சிவன்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.