close
Choose your channels

இளைஞர் கூட்டத்தில் இணைந்ததால் நானும் இளைஞன் ஆகிறேன்: செந்தில்

Saturday, January 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இன்றைய முன்னணி நடிகர்களோடு முந்தைய ஜெனரேஷன் நடிகர்களான கார்த்திக், சுரேஷ்மேனன், செந்தில் ஆகிய நடிகர்களும் நடித்துள்ளதால் இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக செந்தில் வரும் காட்சிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இந்த நிலையில் செந்தில் பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நடித்தது குறித்து கூ'றியதாவது:

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இன்றைய இளைஞர் கூட்டத்துடன் நானும் நடித்துள்ளேன். இந்த படத்தில் சூர்யா உள்பட பல நடிகர்களுடன் குறிப்பாக முத்துராமன் மகன் கார்த்திக்குடன் நானும் நடித்துள்ளேன், இந்த படத்தின் சிறப்பு அம்சம் படத்தின் கதை ஜாலியா போய்க்கொண்டே இருக்கும்.

இந்த தானா சேர்ந்த கூட்டம்' ஒரு நல்ல கூட்டம்.  இளைஞர் கூட்டம். இந்த இளைஞர் கூட்டத்தில் நானும் பங்கேற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இளைஞர்களுடன் சேரும்போது நானும் இளைஞனாகிறேன். இன்றைய இளைஞர்கள் ரொம்ப ஃபாஸ்ட் ஆக உள்ளார்கள். அதேபோல் காமெடியும் ஃபாஸ்ட் ஆகவுள்ளது.

இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன் நன்றாக நடித்துள்ளார்கள். அவருக்கு படையப்பா, பாகுபலி போன்று இந்த படமும் பேர் நல்ல பேர் வாங்கி கொடுக்கும்

இந்த படத்தில் பெட்ரோமாக்ஸ்ஸ் லைட் குறித்த ஒரு காட்சி வரும். வைதேகி காத்திருந்தால் படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி, இந்த படத்தின் காட்சியை பார்க்கும்போது எல்லோருக்கும் ஞாஅகம் வரும்.  இந்த காட்சியை படமாக்கும்போது யூனிட்டே சிரித்தார்கள்

இன்றைய இளைஞர்களின் கண்டுபிடிப்பான மீம்ஸ் என்னை மிகவும் கவர்கிறது. நான் நடித்த காமெடி காட்சிகளை வைத்து இன்றைய அரசியல்வாதி உள்பட பலரையும் மீம்ஸ்கள் உருவாக்குபவர்கள் பயன்படுத்துவதில் எனக்கு பெருமையே.

கவுண்டமணி நல்ல டைமிங் நடிகர். அவருடன் நடிக்கும் அனைவருக்கும் டைமிங் காமெடி தானாக வந்துவிடும். இவ்வாறு செந்தில் தனது பேட்டியில் கூறியுள்ளார்,.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.