close
Choose your channels

சிம்பு சிம்புன்னு என்மனசு மனசு சொல்லுது: காதல் குறித்து ஓவியா

Friday, January 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. பத்து படங்களில் நடித்து கிடைக்கும் புகழை ஒரே ஒரு நிகழ்ச்சியில் பெற்றதோடு சமூக வலைத்தளங்களில் தினமும் டிரெண்ட் ஆனார்.

இந்த நிலையில் ஓவியாவின் பேட்டி ஒன்று வரும் பொங்கல் தினத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகிறது. இந்த பேட்டியின் முன்னோட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த பேட்டியில் தொகுப்பாளினி ப்ரியங்கா, காதல் குறித்து உங்கள் கருத்து என்ன என்று கூறியபோது, 'காதல் என்பது உண்மையில் ஒரு நல்ல விஷயம் என்று கூறிய ஓவியா,' தனது மனதை தொட்டு 'இங்க சிம்பு சிம்புன்னு சொல்லுது' என்று கூறினார். இதே நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பேசிய சிம்பு, 'போன வாரமே நம்ம ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் ஆகி, கல்யாணமும் ஆனதாக வதந்தி வந்தது. இவங்களோட மொக்க தாங்க முடியாம நானே ஒத்துக்கிட வேண்டிய நிலைமைக்கு வந்துட்டேன்' என்று கூற அதற்கு ஓவியா, 'எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, அப்படியே போட்டுடுங்க என்று வதந்தி பரப்புபவர்களுக்கு ஓவியா தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த நிகழ்ச்சியை முழுதாக பார்த்தால்தான் இந்த வீடியோவின் உண்மையான அர்த்தம் புரியவரும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.