close
Choose your channels
evp_raaga
kappan_us

'96' த்ரிஷாவுக்கு நெருக்கமாகும் அனுபமா பரமேஸ்வரன்

Monday, August 19, 2019 • தமிழ் Comments

விஜய்சேதுபதியுடன் த்ரிஷா நடித்த '96' படம் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது 'ஜானு' கேரக்டர்தான். இந்த கேரக்டர் இன்னும் பல ஆண்டுகளுக்கு பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாத ஒரு கேரக்டராக இருக்கும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். இந்த நிலையில் இயக்குனர் கண்ணன் இயக்கி வரும் திரைப்படம் ஒன்றில் கிட்டத்தட்ட 96 த்ரிஷாவின் கேரக்டர் போன்ற ஒரு கேரக்டரில் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார்.

ஜானு கேரக்டரின் 50% சாயல் அனுபமா கேரக்டரில் இருக்கும் என்று கூறிய இயக்குனர் கண்ணன், அனுபமா இதுவரை நடித்திராத கேரக்டர் என்பதால் அவருக்கு நிச்சயம் இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை தரும் என்றார். மேலும் '96' திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்தரம் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'நின்னுக்கோரி' என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், வித்யூலேகா ராமன், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாகவும், இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

கண்ணன் தயாரித்து இயக்கி வரும் இந்த படத்திறன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz