close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' டீசர் ரிலீஸ் தேதி?

Saturday, May 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை 'பாகுபலி 2' பட புகழ் கமலக்கண்ணன் கவனிக்கின்றார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை மகேஷ்பாபுவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இம்மாதம் 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.