close
Choose your channels

விஜய் 62: விஜய்யின் அசாதாரண இன்னொரு பக்கம்

Sunday, August 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் ஒருசில மணி நேரங்களில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் இன்றுமுதல் ஒவ்வொரு இளைஞனின் தேசியகீதமாக மாறவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 62' படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது. மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒருபக்கம் அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியை கவனித்து கொண்டே இன்னொரு பக்கம் 'விஜய் 62' படத்தின் ஸ்கிரிப்டை எழுதி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளீவராத அசாதாரண திரைக்கதையை கொண்ட படம் என்றும், விஜய்யை இதுவரை யாரும் காணாத இன்னொரு பக்கமான அசாதாரண தோற்றம் மற்றும் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் இருக்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்து வெளிவந்துள்ள முதல் செய்தியே வித்தியாசமாக இருப்பதால் அடுத்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மையாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.