close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் அனுபவம்: வைரலாகும் வீடியோ!

Monday, December 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது இசைத் திறமையால் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் என்பதும் இசைக்காக ஆஸ்கார் விருது வாங்கிய ஒரே இந்தியர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஏஆர் ரகுமான் தனது மகனை ஏற்கனவே பாடகர் ஆக்கியுள்ள நிலையில் முதல் முறையாக தனது இரண்டு மகள்களை பாடகியாக்கியது மட்டுமின்றி இரு மகள்களுடன் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

மும்பையில் நடைபெற்ற 'யூ2' என்ற இசைக் கச்சேரியில்தான் ஏஆர் ரஹ்மான் தனது இரு மகன்களுடன் இசைக் கச்சேரி நடத்தி உள்ளார். இந்த இசைக் கச்சேரியில் 'அஹிம்சா' என்னும் சிங்கிள் பாடலை ஏஆர் ரஹ்மான் தனது இரு மகள்களுடன் இணைந்து பாடியுள்ளார். இது குறித்த வீடியோவை கதீஜா ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.