close
Choose your channels

பிரதமர் மோடி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்!

Friday, May 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் உதவி இல்லாமலேயே மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாமலேயே, ஆட்சியை வரும் ஐந்தாண்டு காலத்திற்கு நடத்தவுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், பிரதமர் மோடி மற்றும் பாஜக வெற்றி குறித்து டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எனது வாழ்த்துக்கள். ஒருங்கிணைந்த ஒரு முற்போக்கு இந்தியாவை அனைவரும் இணைந்து உருவாக்குவோம்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.