close
Choose your channels

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்.. இனிமேல் அவ்வளவுதான்.. கோமாளி அறிவிப்பு..!

Sunday, May 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அடுத்தடுத்த எபிசோடு வெளியானது என்பதும் இரண்டு வாரங்களுமே பார்வையாளர்களை கவரும் வகையில் குக்குக்களும் கோமாளிகளும் கலக்கலாக காமெடி செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் 10 கோமாளிகள் மற்றும் 10 குக்குகள் கடந்த வார நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதில் கோமாளியாக அறிமுகம் செய்யப்பட்ட விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நாஞ்சில் விஜயன் திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைத்தளத்தில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுகிறேன், அதே நேரத்தில் விஜய் டிவியுடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, பாக்ஸ் ஆபிஸ் தயாரிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இனி நான் கலந்து கொள்வதில்லை, இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த வாரம் நாஞ்சில் விஜயனுக்கு பதிலாக புதிய கோமாளி ஒருவர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ’அது இது எது’ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியான சிரிச்சா போச்சு சுற்றில் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கொண்டிருக்கும் நாஞ்சில் விஜயன் திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.