'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த 'நேர் கொண்ட பார்வை' நடிகர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருவது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி நடித்து வருவதாகவும் இதனை அடுத்து மற்ற நடிகர்கள் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருப்பதால் அந்த கேரக்டர்களில் நடிக்க அவ்வப்போது இந்த படத்தில் நடிகர்கள் இணைந்து வரும் செய்திகளை பார்த்து வருகிறோம்.

இதனை அடுத்து தற்போது தல அஜித் நடித்த ’நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜூன் சிதம்பரம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார், குந்தவை கேரக்டரில் த்ரிஷா மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சொல்லிட்டேன், என் உயிர் தளபதிக்கு ஆக்சன் சொல்லிட்டேன்: ஒரு பிரபலத்தின் டுவிட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில்

அவரை தூக்கிலிடுங்கள்.. முன்னரே இறந்தால் உடலை கட்டித்தொங்கவிடுங்கள்..! பாக். நீதிமன்றம்.

துபாயில் சிகிச்சை பெற்று வரும் முஷாரப் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பாகப் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பெண் கண்டக்டர் மீது ஆசிட் வீச்சு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் யார்?

பெங்களூரு அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் பெண் மீது 2 மர்ம நபர்கள் திடீரென ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடிவிட்ட சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை கல்லூரி பேராசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்: காதல் தோல்வியா?

சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் அந்த கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த ஒருவர் திடீரென சமீபத்தில் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம்

ரஜினி அப்படியே சொல்லவே இல்லை: அமைச்சர் ஜெயகுமார்

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகின்றன. குறிப்பாக மாணவர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில்