close
Choose your channels

சொந்த மண்ணில் ஹீரோவாக இருப்பது எவ்வளவு பெரிய சந்தோஷம்? உருகும் முன்னணி கிரிக்கெட் வீரர்!

Tuesday, February 16, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இந்திய வீரர் அஸ்வின்தான் ஹீரோவாக செயல்பட்டார். அதிரடி ஆட்டத்தாலும், பந்து வீச்சாலும் அணியின் வெற்றியை உறுதி செய்த அஸ்வினை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டனர். அதுவும் அஸ்வினுக்கு இது சொந்த மண் என்பதால் அவருக்கான பாராட்டு பன்மடங்காக அதிகரித்து இருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தை சார்ந்த அஸ்வின் இதில் அபராமான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தார். ஸ்பின் பவுலிங்கில் கில்லாடியான இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேபோல இரண்டாவது இன்னிங்ஸில் தனது அதிரடி பேட்டிங்கால் சதம் அடித்து இந்திய அணியின் ரன் ரேட்டிங்கையும் கூட்டினார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது இந்திய அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து இருக்கிறார். இதுகுறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அஸ்வின் “நான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமர்ந்துதான் கிரிக்கெட்டுகளை பார்க்கவே ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் இந்த மைதானத்தில் நம்மால் விளையாட முடியுமா? எனப் பலமுறை சிந்தித்து இருக்கிறேன்.

ஆனால் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நான் தொப்பியை கழற்றி பந்து வீசத் தொடங்கினாலே ரசிகர்கள் கரகோஷம் எழுப்பு கின்றனர். நான் ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்து அசந்து போய்விட்டேன். இந்த மைதனாத்தில் விளையாடுவது எல்லாம் ஒரு காலத்தில் கனவாக இருந்தது. தற்போது ரசிகர்கள் என்னை ஒரு பெரிய ஹீரோ போல வரவேற்கிறார்கள். இதனால் சொந்த மண்ணில் ஹீரோவாக இருப்பது என்னவென்று நான் புரிந்து கொண்டேன்” என உருக்கமாகத் தெரிவித்து உள்ளார். இவரின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.