close
Choose your channels

கீர்த்தி பாண்டியனின் வீட்டிற்கு வந்த புதிதாக வந்த 'அசுரன்': வீடியோ, புகைப்படங்கள் வைரல்

Monday, April 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’அன்பிற்கினியாள்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி பாண்டியனின் வீட்டிற்கு புதிய உறுப்பினர் வந்துள்ளதாகவும் அவரது பெயர் ’அசுரன்’ என வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

’அன்பிற்கினியாள்’ திரைப்படத்தில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வீட்டிற்கு வந்த புதிய உறுப்பினர் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் கடந்த பொங்கல் தினத்தில் தங்கள் வீட்டில் ஒரு கன்னுக்குட்டி பிறந்ததாகவும் அந்த கன்னுக்குட்டிக்கு அசுரன் என்று பெயர் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அசுரன் தங்கள் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் என்றும் கூறிய அவர் அந்த கன்னுக்குட்டியுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.