close
Choose your channels

பாகுபலி'க்கு இணையாகுமா 'பஜிராவோ மஸ்தானி'?

Friday, November 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை வாரிக்குவித்த 'பாகுபலி' படத்திற்கு கேரளாவில் மிகப்பெரிய போஸ்டர் அடித்து கின்னஸ் சாதனை செய்த நிலையில், விரைவில் வெளியாகவுள்ள பாலிவுட்டின் வரலாற்று படமான பஜிராவோ மஸ்தானி (Bajirao Mastani) படத்திற்கு 66 அடி நீளத்திற்கு மிகப்பெரிய போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.

ரன்வீர்சிங், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சஞ்சய்லீலா பஞ்சாலி இயக்கியுள்ளார். இந்தி, மராத்தி என இரு மொழிகளில் உருவாகிவரும் இந்த படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை பாலிவுட்டின் 'பாகுபலி' என ரன்வீர்சிங் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்த படத்திலும் பாகுபலி' படத்தை போல் பிரமாண்டமான போர்க்காட்சி ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரபூர்வமான போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்கலில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. போஸ்டர் வெளியான சிலமணி நேரங்களில் 66 அடி போஸ்டரை உருவாக்கி ரன்வீர்சிங் ரசிகர்கள் சாதனை செய்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதே தினத்தில்தால் ஷாருக்கான், கஜோல் நடித்த 'தில்வாலே' திரைப்படமும் ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.