close
Choose your channels

சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை!

Sunday, May 24, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் வெளியே வந்தவுடன் வாய்ப்புகள் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிக்பாஸில் கலந்து கொண்டவர்களும் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்களும் இதையே தான் கூறினார்கள். ஆனால் ஒரு சிலரை தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

இந்த நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ’ஆச்சாரியா’ என்ற திரைப்படத்தில் நடிக்க தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஹிமாஜாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஹிமாஜாவுக்கு ஒரு முக்கிய கேரக்டர் கிடைத்துள்ளதாகவும் சிரஞ்சீவியுடன் அவருக்கு அதிக காட்சிகள் கொண்டதாக இந்த கேரக்டர் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹிமாஜா ஏற்கனவே ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் அவர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவரவில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகி உள்ளனர் என்பதும், தற்போது சிரஞ்சீவி படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பதால் இந்த படம் வெளிவந்தவுடன் அவருக்கு தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz