close
Choose your channels

கேப்டன் டாஸ்க்கிற்காக ஆவேசமாக மோதும் தனலட்சுமி.. என்ன நடந்தது?

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 56 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று 57வது நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போதுதான் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடக்கும் என்பதும் அதே போல் அந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலும் வெளியாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் இந்த வார கேப்டன் டாஸ்க். நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் இரண்டு கயிறுகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு கையால் ஒரு கயிற்றை மட்டுமே பிடிக்கலாம். மற்ற போட்டியாளர்களின் கயிற்றில் இருக்கும் முடிச்சை அவிழ்த்து அதே சமயம் தங்களுடைய கயிற்றை மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் நிபந்தனைகளை தெரிவிக்கிறார்.

இந்த போட்டியில் மணிகண்டன், ஷிவின் மற்றும் தனலட்சுமி ஆகிய மூவரும் கலந்து கொண்டிருக்கும் நிலையில் ஷிவின் அவுட்டாகி வெளியேறி விடுகிறார். அதன் பிறகு மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆவேசமாக மோதும் நிலையில் இந்த வாரமாவது தனலட்சுமியின் கேப்டன் கனவு நனவாகுமா என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.