close
Choose your channels

இன்று வெளியேறுகிறாரா ஜூலி? கசிந்த புகைப்படத்தால் பரபரப்பு

Sunday, August 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய இறுதிக்காட்சியில் நாளை எவிக்சன் இருக்கின்றது என்று கமல்ஹாசன் கூறினார். ஓவியா வெளியேறியதால் இன்று எவிக்சன் இருக்காது என்று சிலர் அடைந்த சந்தேகத்திற்கு இது பதிலாக அமைந்தது.
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே இன்று ஜூலி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பதிவான வாக்குகளில் ஜூலிக்கு வெறும் 4% வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஓவியாவுக்கு 80% மற்றும் வையாபுரிக்கு 16% வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி, கமல் இருக்கும் செட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எவிக்சன் எபிசோட் படப்பிடிப்பு நேற்று இரவு நடந்ததாகவும், அதில் ஆடியன்ஸ் எடுத்த புகைப்படம் தான் இணையத்தில் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் போட்டோஷாப் இல்லாமல் உண்மையாக இருந்தால் ஜூலி வெளியேறியதும் உண்மையாகிவிடும். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.