close
Choose your channels

'தளபதி விஜய்' பெயருடன் டிரைலரை வெளியிட்ட பிக்பாஸ் ஆரி!

Sunday, January 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரி, ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வருகின்றார் என்றும் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அவருக்கு தான் இருக்கிறது என்றும் தற்போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஆரிக்கு கிட்டத்தட்ட டைட்டில் வின்னர் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஆரி நடித்த ‘பகவான்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த இன்னொரு படமான ’அலேகா’ என்ற படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தில் நாயகியாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த டிரைலரின் இறுதியில் போலீசார் ஆரி அடித்து நொறுக்கி ’உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டபோது அவர் ’விஜய்’ என்று கூறுகிறார். அப்போது போலீஸ் ‘முழுப்பெயரையும் சொல்லு’ என்று கூறியபோது, ஆரி, ‘ஜோசப் விஜய்’ என்று கூறுவதுடன் இந்த ட்ரெய்லர் முடிவடைகிறது. ஜோசப் விஜய் என்பது தளபதி விஜய்யின் முழுப்பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.