close
Choose your channels

ரம்யா பாண்டியனுக்கு சவால் விடும் ஜூலி: வைரல் வீடியோ

Monday, May 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரம்யா பாண்டியனுக்கு சவால் விடும் வகையில் பிக் பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் ரியோராஜ் இணைந்து நடனமாடிய மியூசிக் வீடியோ ’தோட்டா’ என்பதும் இந்த மியூசிக் வீடியோ சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்தப் பாடலை பிரேம்ஜி அமரன் மற்றும் நித்யஸ்ரீ வெங்கட்ராமன் பாடியுள்ளனர் என்பதும் இந்த பாடலுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ளார். ரம்யா பாண்டியனுக்கு சவால் விடும் வகையில் அவரை போலவே ஆட முயற்சி செய்து இருக்கும் ஜூலியின் நடனத்திற்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த பாடல் தனது விருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்று என்றும் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியனின் டான்ஸ் மிகவும் அபாரம் என்று ஜூலி அந்த வீடியோவில் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.