close
Choose your channels

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? ஆச்சரிய தகவல்

Monday, May 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

இந்த படத்திற்கு ஒரு சில விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தந்த போதிலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். பல திரையரங்குகளில் இந்தப் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இரண்டே நாட்களில் 11 கோடியும் நான்கு நாட்களில் 34 கோடியும் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளியாகி பதினொரு நாட்கள் முடிவடைந்த நிலையில் 50 கோடியை நெருங்கி விட்டதாகவும் ஓரிரு நாட்களில் 50 கோடியைத் தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக கருதப்படுகிறது .

வரும் 13ஆம் தேதி சிவகார்த்திகேயனின் டான்’ திரைப்படம் பெருவாரியான திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதால் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மொத்த வசூல் 50 கோடியாக முடிந்துவிடும் என்று டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos