close
Choose your channels

பிக்பாஸ் ரேஷ்மாவா இவர்? டீன்ஏஜ் பெண் போல் மாறிய அதிசயம்!

Wednesday, April 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா என்பதும் இவர் ’வேலை வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் சூரியுடன் காமெடி வேடத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ரேஷ்மா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும், இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரேஷ்மா தற்போது சின்னப்பெண் போல் மாறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இவர் அதிக உடல் எடையுடன் இருந்ததை சக போட்டியாளர்கள் கிண்டல் செய்த நிலையில் தற்போது அவர் அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு ஸ்லிம்மாக டீன்ஏஜ் பெண் போல் மாறி விட்டார். இவரது இந்த திடீர் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இதுபோன்று ஸ்லிம் ஆக மாற தான் இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டதாகவும் ரேஷ்மா கூறியுள்ளார். ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.