close
Choose your channels

என்னை விட சிறப்பாக செய்தவர்: லாஸ்லியா தந்தைக்கு கமல் பாராட்டு

Saturday, September 14, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து நிகழ்ச்சியை நெகிழ்ச்சியாக ஆக்கிவிட்டனர். மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தின வருகையின்போது ஒருசில நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில், லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது 

லாஸ்லியாவின் தந்தை பத்து வருடங்கள் கழித்து தனது மகளை பார்த்தாலும் மகளை கண்டிக்கும் விதமும், அவர் மீது பொழிந்த பாசமும் ஒரு முதிர்ச்சியான தந்தையின் நிலையை காட்டியது. மேலும் லாஸ்லியாவின் இந்த நிலைக்கு கவின் தான் காரணம் என்று தெரிந்தும் கவின் மீது அவர் எந்தவிதமான வெறுப்பையும் கோபத்தையும் காட்டாதது அவரது நாகரிகத்தை வெளிப்படுத்தியது என்று கூறலாம் 

இந்த நிலையில் இன்று கமல் நிகழ்ச்சியில் பேசும்போது, ‘கவின் நீங்கள் அதிகம் பதட்டமாக இருந்தீர்கள், டென்ஷன் ஆனீர்கள். ஆனால் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது லாஸ்லியாவின் தந்தை உங்களைத் நடத்திய விதம் தான். உங்கள் மீது அவர் கொஞ்சம்கூட கோபத்தை காட்டவே இல்லை. ஒரு திரில்லர் காட்சியைப் போல் நான் அதை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு தகப்பனாக நான் என்ன செய்திருப்பேனோ, அதைவிட சிறப்பாக லாஸ்லியாவின் தந்தை செய்தார் என்று கமல் கூறியது இன்றைய நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz