close
Choose your channels

நல்லவன், கெட்டவன் எவனும் இல்லை: பாட்டு பாடும் பாலாஜியை முறைக்கும் ஆரி!

Wednesday, January 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் கமல்ஹாசன் பாலாஜிக்கு பல அறிவுரைகள் கூறிய போதிலும் தொடர்ச்சியாக அவர் ஆரியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் பாலாஜி மற்றும் ரம்யா ஆகிய இருவரும் ஜாலியாக பாட்டு பாடி ஆட்டம் போடும் காட்சிகளும், அதனை ஆரி முறைத்து பார்க்கும் காட்சிகளும் உள்ளன.

எங்களிடம் காசு இல்லை
கவலையும் இல்லை
நாங்கள் ரொம்ப நல்ல புள்ள
பேக்ரவுண்ட் இல்லை ஆனால்
பிராபளமும் இல்லை
எவ்வளவு துன்பத்திலும்
நாங்கள் சோர்ந்ததில்லை
நல்லவன் கெட்டவன் யாரும் இல்ல
எல்லாம் நம்ம பார்க்கும் பார்வையில
பிக் பாஸ் ஈஸி இல்லை
ரொம்ப கஷ்டம் நெஞ்சுகுள்ள

என்று பாடல் பாட இந்த பாடலை பாடி முடித்தவுடன் ஜாலியாக இருக்கிறது என்று ரம்யா கூறுகிறார். பாலாஜி மற்றும் ரம்யா ஆட்டம் போட்டு பாட்டு பாடுவதை முறைத்துப் பார்க்கும் ஆரியின் காட்சிகள் இந்த வீடியோவில் இருப்பதால் பாடலுக்கு பின் பிரச்சனை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.