close
Choose your channels

கமல்ஹாசனை விட அபிஷேக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த பிக்பாஸ் டீம்?

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்துவரும் நிலையில் நேற்று இரவு ஒளிபரப்பான எபிசோடில் அபிஷேக் உள்ளே வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் ஒளிபரப்பாகும் மூன்று புரமோக்களிலும் கமல்ஹாசன் தான் பிரதானமாக வருவார் என்பதும் அவரது காட்சிகள் தான் அதிகம் ஒளிபரப்பப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று ஒளிபரப்பாகிய முதல் புரமோ வீடியோவில் நேற்று ரீஎண்ட்ரியான அபிஷேக்கின் காட்சிகள் தான் உள்ளன என்பதை பார்க்கும்போது கமலஹாசனை விட அபிஷேக்குக்கு பிக்பாஸ் டீம் முக்கியத்துவம் கொடுத்து விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

பார்வையாளர்களால் குறைவான வாக்குகள் பெற்று இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்ட ஒரு போட்டியாளருக்கு கமலஹாசனை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.