close
Choose your channels

தாமரைகிட்ட எல்லாரும் ஏமாறுறீங்க: அமீர் சொல்லும் திடுக்கிடும் விஷயம்!

Friday, November 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது சூடுபிடித்துள்ளது என்பதும் குறிப்பாக இரண்டு போட்டியாளர்களின் வைல்ட்கார்ட் வருகைக்குப் பின்னரும் சுவராஸ்யம் அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர், தாமரை குறித்து மற்றவர்களிடம் கூறும் காட்சிகள் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளன. தாமரை கிட்ட எல்லாருமே ஏமாறுறீங்க போல் தெரிகிறது என்றும், அவர் ரொம்ப புத்திசாலி தனமாக விளையாடி வருகிறார் என்றும், நீங்கள் எல்லோரும் அதை புரிந்து கொண்டீர்களா இல்லையா என்று தெரியவில்லை என்று கூறுகிறார்

அதற்கு ’தாமரை அறியாமையால் அப்படி செய்கிறார்’ என்று நிரூப் கூற ’அதெல்லாம் கிடையவே கிடையாது, தாமரை தனக்கு வேண்டியவர்களிடம் மட்டும் சரியாக விளையாடுகிறார், அவர் தன் மேல் ஒரு பரிதாபத்தை உண்டாக்கும் வகையில் செயல்படுகிறார். அவர் மீது நெகட்டிவாக தான் வெளியில் இமேஜ் உள்ளது’ என்று கூறும் காட்சிகளோடு இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து தாமரையிடம் மற்ற போட்டியாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.