close
Choose your channels

பிக்பாஸ் 5 பெண் போட்டியாளர் ஒரு சிலம்ப வீராங்கனையா? வைரல் வீடியோ

Tuesday, October 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள் கலகலப்பாக நடந்து கொண்டார்கள் என்பதும் இன்று கலகலப்பு மற்றும் சென்டிமென்ட் ஆகியவை கலந்து இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் பலரும் பெரும்பாலும் பிரபலம் அடையாதவர்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களின் பழைய வீடியோக்கள் புகைப்படங்கள் ஆகியவை தற்போது தேடி எடுத்து நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுருதி பெரியசாமியின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட சிலம்பம் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சேலத்தில் பிறந்த சுருதி பெரியசாமி மாடலிங் மற்றும் நடிப்பு உள்பட பல தனித்திறமைகளை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சிலம்பம் சுற்றும் வீராங்கணை என்பது தற்போது இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.