close
Choose your channels

என்ன ஒரு தீர்க்கதரிசனம்: பிரியங்காவை கேலி செய்த கமல்ஹாசன்!

Sunday, December 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேசன் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றவர்கள் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். இதனை அடுத்து ஆறு பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று ராஜூவும் என்று பிரியங்காவும் காப்பாற்றப்பட்டனர். அதனை அடுத்து மேலும் இருவர் காப்பாற்றப்பட கடைசியில் அபினய் மற்றும் வருண் ஆகிய இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து இந்த இருவரில் யார் காப்பாற்றப்படுவார்கள் என்பதை கூறுமாறு சக போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்டபோது பிரியங்கா, ஒரு பாய் (BOY) காப்பாற்றப்படுவார் என்று கூற அதற்கு கமல்ஹாசன் கேலியாக ‘என்ன ஒரு தீர்க்கதரிசனம் என்று பிரியங்காவை கூறிவிட்டு, ‘தைரியமாகச் சொல்லுங்கள், பின்னர் அழுது கொள்ளலாம் என கூறியபோது ’வருண் காப்பாற்றப்படுவார்’ என்று கூறினார்.

இதனை அடுத்து பாவனியும் வருண் பெயரை கூற, அபினய் காப்பாற்றப்படுவார் என்று ராஜூ கூறுகிறார். இதனை அடுத்து ’மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்’ என்று கமல்ஹாசன் கூறுவதுடன் இன்றைய அடுத்த புரோமோ வீடியோ முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.