close
Choose your channels

இமான் அண்ணாச்சியாக மாறிய பிரியங்கா: இன்னிக்கு வேற லெவல் Fun இருக்கு!

Friday, October 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரோமோ வீடியோவில் அண்ணாச்சி ஆக மாறி பிரியங்கா கலாய்ப்பது காமெடியில் உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக விளையாடி வருகின்றனர். தங்களுடைய சொந்த கதையை சொல்லும்போது மட்டும் சென்டிமென்ட் அவ்வப்போது எட்டிப் பார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா வேற லெவல் என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக பிக்பாஸையே அவர் கலாய்ப்பது நகைச்சுவையின் உச்சகட்டமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் ஒவ்வொரு போட்டியாளர்கள்போல இமான் அண்ணாச்சி நடித்துக் காட்டுகிறார். நமீதா, இசைவாணி, சின்னப்பொண்ணு ஆகியோர்களை நடித்துக் காட்டிய இமான் அண்ணாச்சி, கடைசியில் பிரியங்கா போலவும் நடித்துக் காட்டினார். அப்போது பிரியங்கா பதிலடியாக இமான் அண்னாச்சி போலவே நடித்து காட்டியது சரியான பதிலடியாக இருந்தது.

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் ஏகப்பட்ட காமெடி இருக்கின்றது என்பது மட்டும் இந்த புரமோ வீடியோவில் இருந்து தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.