கோடி ரூபாய் வைத்தாலும் எடுக்க மாட்டேன்: கூறுவது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பணப்பெட்டி நேற்று வைக்கப்பட்டது என்பதும் இந்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியே செல்லலாம் என பிக்பாஸ் அறிவித்தும் யாரும் பணப் பெட்டியை எடுக்க முன்வரவில்லை என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பணப்பெட்டியின் மதிப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் இன்றைய முதல் புரமோவில் பார்த்தோம். இந்த நிலையில் பணப்பெட்டியின் அருகில் சென்று தாமரை அதை பார்த்துகொண்டிருக்கும் போது அங்கு வரும் நிரூப் பணப்பெட்டியை எடுக்காதே என்று கூறுகிறார்.

அப்போது தாமரை, ‘நான் ஏன் எடுக்க போறேன், இந்த வீட்டில் தங்குவதை விட எனக்கு பணமா பெரிது? கோடிக் கணக்கில் ரூபாய் வைத்தாலும் நான் எடுக்க மாட்டேன். சம்பாதிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கிறது’ என்று தாமரை கூறுகிறார். மேலும் நீ எடுத்துக் கொண்டு இதுவும் ஒரு கேம்தான் என்று வெளியே போய் விடாதே என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனவே பண பெட்டியை தாமரை எடுக்க மாட்டார் என்பது இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால் அந்த பணப்பெட்டியை எடுப்பவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களில் பலர் தாமரை தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமரையின் உறுதியான முடிவு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது என்பதும் அவர் மீது இன்னும் மரியாதை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சின்ன வயதில் KPY பாலா செய்த பெரிய செயல்: குவியும் வாழ்த்துக்கள்

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா இந்த சின்ன வயதில் செய்த பெரிய செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 

'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதையடுத்து எஸ்எஸ் ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் ஸ்டண்ட் இயக்குனர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்கள் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாகவும் அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

'வலிமை' படத்தில் போனிகபூர் மகள் நடித்தாரா? ஆச்சரிய தகவல்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என இப்போதுவரை செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் தமிழக அரசு வரும் 10ஆம் தேதி எடுக்கும்

இரண்டு முறை அதிகரித்த பிக்பாஸ் பணப்பெட்டி தொகை: எத்தனை லட்சம் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரே வாரத்தில் முடிவடையவுள்ள நிலையில் இந்த போட்டியில் தற்போது 7 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் பிக்பாஸ் தரும் பணப்பெட்டியை