close
Choose your channels

சின்ன வயதில் KPY பாலா செய்த பெரிய செயல்: குவியும் வாழ்த்துக்கள்

Wednesday, January 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா இந்த சின்ன வயதில் செய்த பெரிய செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

KPY பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில சிறுவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இந்த சிறுவர்களில் இருவரின் படிப்புக்கான செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

எல்லாரிடமும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வருடத்திலிருந்து இதில் இருக்கும் இரண்டு குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கான செலவை ஏற்றுள்ளேன். இனி வரும் வருடங்களில் இதில் இருக்கும் அனைத்து குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள முயற்சி எடுப்பேன். இதை பந்தாவுக்காக பகிரவில்லை, என்னை சமுக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்ளோடு இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஏதோ என்னால முடிந்தது. லவ் யூ ஆல்! என்று பகிர்ந்துள்ளார்.

இதனை அடுத்து பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக விஜய் டிவி புகழ் இந்த பதிவுக்கு, ‘’நம்ம கூட இருக்கறவங்கள நாம பாத்துக்கிட்டா, மேலே இருக்கிறவன் நம்மள பாத்துப்பான், நல்லதே நினை நல்லதே நடக்கும்’ என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் மணிமேகலை, ஆர்ஜே விஜய் உள்பட பலர் பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.