close
Choose your channels

இயக்குனர் நெல்சனை சந்தித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ! வைரல் புகைப்படம்!

Sunday, January 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் டைட்டில் வின்னரான ராஜூ சமீபத்தில் இயக்குனர் நெல்சனை சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜூவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு மற்றும் டைட்டில் வின்னருக்கான கோப்பை வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. பிக் பாஸ் டைட்டில் வின்னர் கோப்பையை ஏற்கனவே தனது குரு கே.பாக்யராஜ் அவர்களிடம் தந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராஜு, தற்போது அதே கோப்பையை இயக்குனர் நெல்சனிடம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் கோப்பையை கையில் வாங்கி மகிழ்ச்சியுடன் பார்க்கும் நெல்சன், ராஜூவுக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஏற்கனவே ராஜூ மற்றும் நெல்சன் நல்ல நண்பர்கள் என்ற நிலையில், பிக் பாஸ் வின்னர் ராஜுவுக்கு நெல்சன் தனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.