close
Choose your channels

கிளாமரில் கலக்கும் பிக்பாஸ் விஜே மகேஸ்வரி.. வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, March 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மகேஸ்வரியின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் மகேஸ்வரி என்பதும் இவர் போல்டாக தனது கருத்தை தெரிவித்து ரசிகர்களின் மனதை வென்றார் என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக அசீம் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்ற செய்தி வெளியானதும் ஒரு தவறான முன்னுதாரணம் என்று மகேஸ்வரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அசிம் உடன் அவர் பலமுறை நேருக்கு நேர் மோதினார் என்பதும் குறிப்பாக எலிமினேஷனுக்கு பிறகு விருந்தினராக சென்றபோது கூட அவர் அசீமுடன் சண்டை போட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விக்ரமனுடன் அவருக்கு சில கருத்து வேறுபாடு இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவரது நல்ல குணங்களை பாராட்டினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மகேஸ்வரி சமீபத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்த நல்ல நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.