close
Choose your channels

'நானே வருவேன்' நாயகியாகும் 'பிகில்' பட நடிகை!

Saturday, October 16, 2021 • தமிழ் Comments

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ’நானே வருவேன்’ படத்தின் பூஜையில் நடிகை இந்துஜா கலந்து கொண்டார். இதனை அடுத்து அவர் இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் ஏற்கனவே தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தனுஷ் நடித்த ‘மாறன்’ மற்றும் ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ரெடியாகி தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz