close
Choose your channels

'பிகில்' நடிகையை அலாக்காக தூக்கிய இளைஞர் யார்? மாலத்தீவின் அழகிய புகைப்படங்கள்!

Monday, February 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகள் அனைவருமே மாலத்தீவு சென்றுள்ள நிலையில் தற்போது 'பிகில்’ படத்தில் நடித்த நடிகையும் மாலத்தீவு சென்று உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் நடித்த 'பிகில்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். இவர் சமீபத்தில் மாலத்தீவு சென்று உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவில் ’மாலத்தீவில் இருக்கும் அமைதி மற்றும் அழகை எதனுடனும் ஒப்பிட முடியாது என்றும் இந்த தீவின் அழகு குறித்து என்ன பதிவு செய்வது என்று எனக்கு புரியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இங்கு தங்கி இருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும் உலகின் மிக அழகான பவளப்பாறைகள் இங்குதான் அமைந்திருக்கிறது என்றும் அமைதி மற்றும் அழியாத அழகு நிறைந்துள்ள இந்த இடத்தில் தங்குவதில்லை எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்களில் இளைஞர் ஒருவர் அவரை அலாக்காக தூக்கி வைத்திருப்பது போன்று இருக்கும் நிலையில் அந்த இளைஞர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.