close
Choose your channels

"இவர் தான் லிட்டில் சச்சின்"..! பந்து வீசி, வியந்த பிரட் லீ... வீடியோ.

Saturday, March 7, 2020 • தமிழ் Sport News Comments

இவர் தான் லிட்டில் சச்சின்..! பந்து வீசி, வியந்த பிரட் லீ... வீடியோ.

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதி போட்டி மெல்போர்ன் நகரில் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டியானது நடக்கிறது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையின் டிவிட்டர் பக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 6 வயது சிறுமி தனது பேட்டிங் திறமையை ஆஸ்திரேலியாவின் முன்னாள் பந்துவீச்சாளர் பிரட் லீயிடம் காட்டுகிறார். அந்த சிறுமியின் பெயர் தானீஷா சென். அந்த சிறுமியின் பேட்டிங் திறமையைக் கண்டு வியந்த பிரட் லீ சச்சினை சிறுவயதில் பார்க்கிறது போல இருக்கிறது தெரிவித்திருந்தார்.

தானீஷா சென்னிடம் அவருக்கு பிடித்த ஷாட் என்ன என்று கேட்ட போது கவர் டிரைவ் எனக் கூறுகிறார். இந்தியா கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தனக்கு பிடித்த வீராங்கனை என்றும் கூறினார். தானீஷா தனது நாட்டுக்காக ஆடுவதை பார்க்க தான் ஆர்வமாக உள்ளதாக பிரட் லீ தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது வைரலாக எல்லோராலும் பகிரபட்டு வருகின்றது.

 

Get Breaking News Alerts From IndiaGlitz