close
Choose your channels

'குக் வித் கோமாளி' தாமு இவ்வளவு ஒல்லியா இருந்தாரா? வைரல் புகைப்படம்!

Monday, July 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் அனைவரும் வேற லெவலில் பிரபலமானார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பணியாற்றிய செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் கூட நகைச்சுவையுடன் இடையிடையே தங்களது பர்பாமன்ஸ் காட்டினார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக செப் தாமு இடை இடையே கோமாளிகளுடன் ஆட்டம் போட்டு அவர்களின் கோமாளித்தனத்தை ரசித்து வந்ததோடு அழகிகளுடன் டான்ஸ் ஆடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செஃப் தாமு இருப்பார் என்பதும் அதில் தனது குடும்பத்தினரின் புகைப்படங்களையும் தன்னுடைய சமையல் குறிப்புகளை உடைய வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவருடைய பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. செஃப் தாமு தனது கைக்குழந்தை மகளை தூக்கி வைத்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். செஃப் தாமுவா இவர்? ஒரு காலத்தில் இவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறாரா என்று ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.