close
Choose your channels

அஜித் படத்திற்காக சிரஞ்சீவி செய்த தியாகம்.. வைரல் புகைப்படம்!

Wednesday, January 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தின் ரீமேக் படத்திற்காக சிரஞ்சீவி செய்த கெட்டப் மாற்றம் குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜீத் நடித்த ’வேதாளம்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் கலக்கியிருப்பார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது உருவாக்கி வருகிறது என்பதும், ‘போலோ சங்கர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் வேடத்தில் சிரஞ்சீவி, ஸ்ருதி ஹாசன் வேடத்தில் தமன்னா, லட்சுமி மேனன் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்தை ரமேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் ’வேதாளம்’ என்ற கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து இருந்த நிலையில் அந்த கேரக்டருக்காக சிரஞ்சீவி மொட்டை அடித்துள்ளார். பொதுவாக பெரிய ஸ்டார்கள் மொட்டை அடித்து கெட்டப் மாறும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என்ற நிலையில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி தனது ரசிகர்களுக்காக மொட்டை அடித்து தியாகம் செய்துள்ளதாக கருதப்படுகிறது. சிரஞ்சீவி மொட்டையுடன் இருக்கும் வித்தியாசமான கெட்டப் குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment