பிரபல இயக்குனர் படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடல்: முதல்வர் வெளியிட்டார்
பிரபல இயக்குனர் துரை இயக்கத்தில் இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ’நாற்காலி’ என்ற படத்தில் இடம் பெற்ற எம்ஜிஆர் பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
‘நாற்காலி’ படத்தில் இடம்பெற்றுள்ள எம்ஜிஆரின் புகழ்பாடும் ’நெஞ்சமுண்டு நேர்மை’ என்று என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட அதனை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் பெற்று கொண்டார்.
எம்ஜிஆர் நடித்த ’என் அண்ணன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து பா.விஜய் எழுதிய இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு, அந்த வள்ளலுக்கு வச்ச பெயர் வாத்தியாரு’ என்று தொடங்கும் இந்த பாடல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துரை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அமீர் ஜோடியாக சாந்தினி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.