close
Choose your channels

'தளபதி 67'  படத்தில் பணிபுரிய வாய்ப்பு? கோவை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு!

Friday, November 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தளபதி 67’ படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் படத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு குறித்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தமிழக காவல் துறை தீவிரமாக எடுத்து வரும் நிலையில் கோவை மாநகர காவல் துறை மற்றும் தனியார் நிறுவனம் ஒன்று இணைந்து குறும்படப் போட்டியை அறிவித்து உள்ளது.

’போதை தடுப்பு விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான குறும்படங்களை அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் மட்டும் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்று அந்த படத்தில் உதவி இயக்குனராகும் வாய்ப்பை பெறுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment