close
Choose your channels

படுக்கை அறையில் பிகினி உடை.. 'கோமாளி' நடிகையின் வைரல் புகைப்படம்!

Wednesday, December 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி’ படத்தில் நடித்த நடிகை படுக்கையறையில் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு சுமார் ஒரு லட்சம் லைக்குகள் கிடைத்து உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான 'கோமாளி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து இருந்தனர்.

இவர்களில் சம்யுக்தா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சம்யுக்தா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் சமீபத்தில் கூட அவர் கடலில் டைவ் அடித்து வாங்கிய சான்றிதழை புகைப்படத்தை வெளியிட்டு இருந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் படுக்கை அறையில் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பொதுவாக நீச்சல் குளத்தில் தான் பிகினி உடையில் நடிகைகள் போஸ் கொடுப்பார்கள் என்ற வகையில் இவர் வித்தியாசமாக படுக்கையறையில் பிகினி போஸ் கொடுத்துள்ளதை அடுத்து ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.