close
Choose your channels

தெலுங்கு திரையுலகிலும் கால் வைக்கும் ரெடின் கிங்ஸ்லி: எந்த படத்தில் தெரியுமா?

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ‘டாக்டர்’ திரைப்படத்தில் காமெடியில் கலக்கிய ரெடின் கிங்ஸ்லி தற்போது சுமார் 10 தமிழ் படங்களில் நடித்து வரும் நிலையில் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’டாக்டர்’ திரைப்படத்தில் தனது டைமிங் காமெடி மூலம் கலக்கிய ரெடின் கிங்ஸ்லி ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய்யின் ’பீஸ்ட்’, சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிம்புவின் ’பத்து தல’ உள்பட 10 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்திநேனி நடிப்பில் உருவாகி வரும் ’தி வாரியர்’ என்ற தெலுங்கு திரைப்படத்திலும் காமெடி வேடத்தில் ரெடின் கிங்ஸ்லி நடிக்க உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால் வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.