ஷிவாங்கியின் முதல் தமிழ் திரைப்படம்: மாஸ் நடிகருக்கு தங்கையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை பாசம், அஸ்வின் மற்றும் ஷிவாங்கியின் ரொமான்ஸ் காட்சிகள் இந்த நிகழ்ச்சியை சுவராசியமாக கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்கனவே புகழ் ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். நிலையில் தற்போது ஷிவாங்கியின் முதல் படம் தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படமான ’டான்’ என்ற திரைப்படத்தில் தான் ஷிவாங்கி நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிவாங்கி மட்டுமின்றி ஆர்ஜே விஜய், முனிஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் ஆகியோர்களும் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் முக்கிய கேரக்டர்களில் சமுத்திரக்கனி மற்றும் சூரி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

சிபி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

OPS மவுனம்- சசிகலாவுடன் கூட்டணிக்கு ஒத்திகையா? ரகசியத்தை உடைக்கும் பிரத்யேகப் பேட்டி!

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார் திருமதி சசிகலா.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா-ஜோதிகா படங்கள்!

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் தமிழ் படங்களின் பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த படங்கள் இடம்பெற்றுள்ளன.

திடுக்கிடும் தகவல்களை சுயசரிதையில் அம்பலப்படுத்திய விஜய் பட நடிகை!

தளபதி விஜய் நடித்த 'தமிழன்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட் ஹாலிவுட் என உலக அளவில் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சுயசரிதையில்

பிகினி உடையில் கலக்கும் இளம் தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதன் பிறகு அவர் ஜெயம் ரவியின் 'அடங்கமறு' விஷாலின் 'அயோக்யா'

ஆரியின் திடீர் விசிட்டால் இன்ப அதிர்ச்சி அடைந்த அனிதா: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் எப்போதாவது ஒருமுறை தான் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வார்கள் என்பதும் ஒரு சிலர்