close
Choose your channels

'வலிமை' பட நடிகர், பிக்பாஸ் போட்டியாளர்: 'குக் வித் கோமாளி சீசன் 4 குக்குகள் லிஸ்ட்!

Tuesday, January 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ பட நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ஆகியோர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் குக்குகள் யார் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

முதலாவதாக கடந்த மூன்று சிசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி தற்போது பதவி உயர் பெற்று இந்த சீசனில் குக் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து ரசிகர்களால் மடிப்பு ஹம்சா அழைக்கப்படும் நடிகை விசித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் குக் என தெரிகிறது.

மேலும் ’வலிமை’ திரைப்படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்த ராஜ் அய்யப்பா என்பவரும் ஒரு குக் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் குக் வித் கோமாளி போட்டியாளர் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் எந்தெந்த போட்டியாளர் குக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.