close
Choose your channels

'குக் வித் கோமாளி' சீசன் 4 தொடங்கும் தேதி.., கோமாளிகள் யார் யார்?

Monday, January 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் நம்பர் 1 'குக் வித் கோமாளி’ என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பது தெரிந்தது.

பொதுவாக எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களையும் ஒருமுறைக்கு மேல் பார்த்தால் போரடிக்கும். ஆனால் 'குக் வித் கோமாளி’ கடந்த சீசன்களை இப்பொழுது கூட தினந்தோறும் பலர் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 'குக் வித் கோமாளி’ நான்காவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் டீசர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஜனவரி 28ஆம் தேதி முதல் 'குக் வித் கோமாளி’ 4வது சீசன் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீசனின் கோமாளிகளாக மணிமேகலை, ஜி.பி முத்து, சிங்கப்பூர் தீபன், சுனிதா, மோனிஷா, ரவீனா மற்றும் ஓட்டேரி சிவா ஆகியோர் உள்ளனர். ஏற்கனவே உள்ள கோமாளிகளான புகழ், பாலா ,குரேஷி, ஷிவாங்கி, உள்ளிட்டவர்கள் இந்த சீசனிலும் இருப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.