close
Choose your channels

மீமாவது, கீமாவது, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: செஃப் வெங்கடேஷ் பட்

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட், ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்றும் மீமாவது, கீமாவது என்றும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமை நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ‘இந்த நிகழ்ச்சியை பார்த்த ஒரு பெண் தனக்கு மன அழுத்தம் குறைந்ததால், தான் கர்ப்பம் ஆனதாக கூறியதாக தெரிவித்தார். இந்த தகவல் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் ஒருசிலர் மீம்ஸ் மூலம் கிண்டலடித்தனர்.

இந்த மீம்ஸ் தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாக வெங்கடேஷ் பட் தனது பேஸ்புக்கில் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் அவர்களுக்கு ஆதரவாக ஏராளமான நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்ததை அடுத்து தற்போது மீண்டும் அவர் உற்சாகமாக உள்ளார்.

தனது உருக்கமான பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் நான் மீண்டு வருவதற்கு இது போதுமே என்று தெரிவித்துள்ள வெங்கடேஷ் பட், ‘எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் நீங்கள் இருக்கும் போது மீமாவது, கீமாவது என மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு சவால் விடும் வகையில் பேஸ்புக்கில் பதிவுசெய்து உள்ளார்.

மேலும் தனக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 20000 மெசேஜ்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் வந்ததாக தெரிவித்த வெங்கடேஷ் பட், ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவிற்கும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.