இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா… அச்சமூட்டும் பாதிப்பு எண்ணிக்கை!

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]

இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தலைத்தூக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்தது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் இரண்டாவது அலையை ஆரம்பித்து விட்டதாக சில நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 72,330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் கருத்துத் தெரிவித்து உள்ளது.

மேலும் நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கை 459 எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,62,927 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் இதுவரை 6,51,17,896 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் சார்பில் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் 5 மாநிலங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் மேலும் நிலைமை சிக்கலுக்குள்ளாகுமா என்பது குறித்தும் இந்தத் தேர்தல்களுக்குப் பின் மீண்டும் ஊரடங்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு இதுவரை 60 வயதிற்கு மேல் மற்றும் 45 மேல் உள்ள இணைநோயர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி இன்று (ஏப்ரல் 1) முதல் 45 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஷங்கர் மீது லைகா தொடுத்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'இந்தியன் 2'.

ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்றுமுன்னர் இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

தாதா சாகேப் பால்கே விருது: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஈபிஎஸ், முக ஸ்டாலின்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் மத்திய அரசு திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அளித்தது என்பது தெரிந்ததே. மத்திய அமைச்சர் ஜவடேகர் அவர்கள் சற்று முன் இந்த

தாதா சாகேப் விருது, ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்: கமல்ஹாசன்

இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள்

'குக் வித் கோமாளி' சீசன் 3க்கு அழைத்தால் போக மாட்டேன்: விஜய் பட நடிகை பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி சீசன் 2 மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் சீசன் 1ஐவிட சிசன் 2 இரு மடங்குக்கும் மேலாக வரவேற்பை பெற்றுள்ளது