close
Choose your channels

தாதா சாகேப் விருது, ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்: கமல்ஹாசன்

Thursday, April 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான கமலஹாசன் தனது டுவிட்டரில் தாதாசாகிப் பால்கே விருது ரஜினிக்கு 100% பொருத்தம் என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.